Sunday, May 22, 2005

இப்படியும் ஓர் Extraordinary இளைஞர் !!!

நமது தெருக்களில் மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர்கள், அழுக்கான கிழிந்த உடையில் துர்நாற்றத்துடன் திரிவதை பார்த்திருப்பீர்கள். பொதுவாக, மக்கள் அவர்களை தவிர்ப்பதையும் காண முடியும். அத்தகையோருக்கு அடிப்படைத் தேவையான உணவை, 24 வயது நிரம்பிய கிருஷ்ணன் என்ற மதுரைக்காரர் கடந்த 3 வருடங்களாக வழங்கி வருகிறார்.

Image hosted by Photobucket.com

இவ்விளைஞர், சமையல் கலை குறித்த படிப்பை முடித்து விட்டு, பெங்களூரில் உள்ள தாஜ் ஹோட்டலில், ஏப்ரல் 2002-இல், 18000 ரூபாய் சம்பளத்திற்கு பணியில் சேர்ந்தார். ஒரு சிறு விடுமுறையில் மதுரைக்கு வந்த அவரின் வாழ்க்கைப் பாதையை ஒரு சம்பவம் மாற்றியமைத்தது !!! தெருவில் அவர் பார்த்த ஒரு மனநிலை குன்றியவர், தாங்க முடியாத பசியில் தனது மலத்தையே எடுத்துண்ணும் கொடுமையைக் கண்டு அதிர்ந்து போய் அந்த மனிதருக்கு உணவு வாங்கிக் கொடுத்தார். பெங்களூர் திரும்பியும், அந்த நிகழ்வு அவர் மனதை விட்டு அகலவில்லை !

அத்தகைய நலிந்த ஜீவன்களுக்கு உணவு அளிப்பதே தனக்கு நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாக உணர்ந்த கிருஷ்ணன், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு மதுரை திரும்பி, தெருக்களில் அனாதையாக விடப்பட்ட மனநிலை குன்றிய நலிந்தவருக்கு தன்னால் இயன்றதை செய்து வந்தார். சில மாதங்களில் மகனின் உயர்ந்த உள்ளத்தை புரிந்து கொண்ட அவரது தந்தை, கொஞ்சம் பணவுதவி செய்தார்; தாய் உணவு சமைத்து வழங்கினார்.

Image hosted by Photobucket.com

ஆனால் அவை போதுமானதாக இல்லை. கிருஷ்ணன் சில உணவு விடுதிகளை அணுகி, மீந்து போகும் உணவை தந்துதவுமாறு வேண்டினார். தற்போது, கிருஷ்ணன் தனது வீட்டின் பின்புறத்தில், ஒருவரின் உதவியோடு, இந்த தெருவோர ஜீவன்களுக்காக, தினமும் தானே சமைக்கிறார். இவரின் தன்னலம் கருதா குணத்தை பாராட்டி ஒரு நல்லவர் தனது காரை தானமாக வழங்கி உதவினார். கிருஷ்ணன், இந்த காரில் உணவை எடுத்துச் சென்று, தினம் மூன்று வேளை வினியோகம் செய்கிறார்.

பண உதவி ஓரளவு கிட்டியும், தனியொருவராக சமாளிக்க இயலாததால் சில நல்ல உள்ளங்களுடன் இணைந்து AKSHAYA's helping in HELP என்ற டிரஸ்டை நிறுவினார். கடந்த 3 வருடங்களாக இச்சேவையை செய்து வரும் இவ்விளைஞர், " நான் ஒரு பணியில் சேர்வதென்பது இயலாத ஒன்று. அதனால், இம்மக்கள் மறுபடியும் பட்டினி கிடக்க நேரிடும். கிடைக்கும் உதவியை வைத்துக் கொண்டு இந்த சேவையை நான் வாழும் வரை செய்வதே என் லட்சியம்" என்று அமைதியாக எடுத்துரைக்கிறார் இந்த உன்னதமான இளைஞர் !!!

இந்த சேவை இவரது முழு நேரத்தையும் ஆக்ரமிக்கிறது. மேலும், இந்த நலிந்த ஜீவன்களுக்கு, முடி திருத்துவதையும், சுத்தப்படுத்துவதையும் கூட தானே செய்து வருகிறார். கடந்த 3 வருடங்களாக, ஓய்வு என்பதே இல்லாமல், நாள் தவறாமல், சமூகத்தால் ஒதுக்கப்பட்ட இம்மக்களுக்கு உணவு அளித்து வரும் கிருஷ்ணன், இவர்கள் வாழ்வில் தோன்றிய விடிவெள்ளி என்பதில் சந்தேகமில்லை !

இத்தகைய அசாதாரணமான இளைஞர்களை பார்க்கும்போது, வருங்கால இந்தியா மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படுகிறது !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

12 மறுமொழிகள்:

Muthu said...

நல்ல பதிவு. இத்தகைய இளைஞர்கள் தீப்பொறி போன்றவர்கள் என்பதில் சந்தேகமில்லை.

demigod said...

24 வயதில் இத்தகைய முயற்சி கண்டிப்பாக பாராட்டபட வேண்டிய ஒன்று. Thanks for bringing out such posts. please let us know the contact details of this guy, we should try our best to help him in his mission.

ச.சங்கர் said...

Dear பாலா,

யோசிக்க வைக்கும் பதிவு. வாழ்த்துக்கள்.

சமூக அவலங்களை பார்த்து உதவி செய்ய முழுமனதாய் தம்மை அர்பணிக்க வந்துள்ள krishnan மாதிரியானவர்கள் உண்மயிலேயே உதாரண புருடர்கள்தான்.

மற்றுமொரு உதாரணம் ட்சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ எங்கிருந்தோ ஓடி வந்த vivek oberai.(நம் தலைவர்களில் பெரும்பாலோர் செய்தது இவர்களை குறை சொன்னதுதான் என்பது வேதனை)

KUDOS to KRISHNAN & VIVEK OBERAI

இவர்களே "தலைவா" என்று விளிக்க தகுதியானவர்கள் என்பது என் கருத்து(இதை உன்னுடைய/உங்களுடைய இன்னொரு பதிவில் ஊடாடப்பட்ட பின்னூட்டங்களின் நீட்டல்(extension !!) என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

பின் குறிப்பு : krishnan செய்யும் இந்த புனிதமான பணிக்கு எதேனும் பொருளுதவி பெற்றுக் கொள்வாரேயானால் முடிந்தது செய்யத் தயார்.(ராமருக்கு அணில் போல).இதை பற்றி ஏதேனும் விவரம் இருந்தால் பதிவு செய்யவும்.

said...

good posting

Chandravathanaa said...

சமூக அவலங்களை பார்த்து உதவி செய்ய முழுமனதாய் தம்மை அர்பணிக்க வந்துள்ள krishnan மாதிரியானவர்கள் உண்மயிலேயே பாராட்டப் பட வேண்டியவர்கள்.

வலைஞன் said...

வரவேற்கப் படவேண்டிய வரலாறுகள்

said...

Dear Bala
Sorry for posting in english. I read your article and was very impressed with your work. I have a charity and currently I am supporting few projects in chennai. My website is www.dishaa.org.
I would like to know where you heard about this guy and any additional details on him or the organization would be of great help. I am sure I can help this organization in some form.

Thanks
Suresh

enRenRum-anbudan.BALA said...

முத்து, rhavee, sankarS, சந்திரவதனா, அனுராக், SURESH
கருத்துக்களுக்கு நன்றி !

rhavee, sankarS, SURESH,
உதவ முன் வந்ததற்கு மிக்க நன்றி. முதலில், இந்த இளைஞரைப் பற்றி ஆங்கில நாளிதழ் ஒன்றில் படித்ததாக
ஞாபகம். மேலும் விசாரித்தபோது, அவரது அக்ஷயா டிரஸ்ட் பற்றி தகவல் கிடைத்தது. 9843319933 அல்லது
5353439 (மதுரை) ஆகிய டெலிபோன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

I am willing to co-ordinate to enable our contribution in reaching Krishnan or assist in whatever manner possible.
My contact no. is 91-44-52004714 (off.). Mr. Krishnan needs about Rs.2000 a day to feed about 100
people, 3 times a day. I spoke to Krishnan about the service he is rendering to these unfortunate people.

என்றென்றும் அன்புடன்
பாலா

NONO said...

பாராட்டபடவேண்டியது!!!!

Arun Vaidyanathan said...

Gr8 Gr8 Gr8.

enRenRum-anbudan.BALA said...

Pl. see below Mr.Krishnan's mail to me on Fund (contribution) transfer details:

Dear Bala
June 23,
2005

Please accept our gratitude for circulating details about our feeding
programme in your mail. We are indebted to you and your friends for the
encouraging comments and offer to give a helping hand.


The word about the programme goes around by word of mouth and also
occasional press publicity. Many kind hearted and charitably disposed
individuals and organisations come forward to help us.

Currently we are feeding about 130 people on the road thrice a day at a cost
of around Rs.3000.

The work is going on without a break for the last three years irrespective
of rain or shine.

We will be happy to receive you and your friends any time to have a personal
experience of this programme.

Details regarding fund transfer to Akshaya are given below. We are a
formally registered trust and obtained income tax exemption under section
80G valid upto 31st March, 2007.

You and your friends are welcome to use this email for communication.

Please advise if you need any more particulars.

Regards,
N. Krishnan

-----------

Fund transfer details

Akshaya's Helping in H.E.L.P Trust has an account with

ICICI Bank Kochadai branch, Madurai.
The account number is : 601701013912 .

Any remittance in Indian Rupees (INR) can be made in the above account from
any branch of ICICI in India.

Such of those well wishers who can credit to Akshaya's account in Indian
Rupees can do so without any problem. We also have exemption under 80(G) of
IT Act 1969, valid until March 31st, 2007.

---------

To receive funds in foreign currency we have to register with the Home
Ministry of Government of India. This registration can be completed only
after the trust has been functional for atleast 3 years. We may have to wait
for some more time before we can receive funds in foreign currency in the
name of the Trust.

----------------------------------------------------------------------------
----

For those people who are not in a position to transfer funds in Indian
Rupees,
we have opened a Savings Bank account in the name of

Mr. N. Krishnan with ICICI Bank K.K.Nagar branch, Madurai.India
The account number is : 601601504494.
MICR code for this account is : 625229006.

Details regarding money transfer to India, in currencies other than Indian
Rupees, are attached to this message. These instructions have been provided
by ICICI Bank.

If you require any more details please advise.

said...

Solla Varthai Illai ...Nandri

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails